- செய்திகள், வணிகம்

ஏ.டி.எம்.கள் நிறுவும் முனைப்பில் அரசு வங்கிகள் இலக்கை எட்ட வேண்டிய கட்டாயம்

 

புதுடெல்லி, பிப்.8:-

இந்தி நிதி ஆண்டுக்கான ஏ.டி.எம்.கள் நிறுவும் இலக்கை எட்டும் முனைப்பில் அரசு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த காலாண்டுக்குள் இன்னும் சுமார் 5,500 ஏ.டி.எம்.களை அமைத்தால் மட்டுமே வங்கிகளால் இலக்கை எட்ட முடியும்.

27 அரசு வங்கிகள்

மத்திய நிதி அமைச்சகத்தின் காலாண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நம் நாட்டில் தற்போது 27 அரசு வங்கிகள் செயல்பட்டு  வருகின்றன. இந்த நிதி ஆண்டில் (2015-16) 15,949 ஏ.டி.எம்.களை அமைக்க அரசு வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை (ஏப்ரல்-டிசம்பர்) 10,447 ஏ.டி.எம்.களை வங்கிகள் நிறுவி உள்ளன. ஆக, இந்த நான்காவது காலாண்டுக்குள் (ஜனவரி-மார்ச்) 5,502 ஏ.டி.எம்.களை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் உள்ளன. இதனால் வங்கிகள் ஏ.டி.எம்.களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அரசு வங்கிகளில், பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், விஜயா வங்கி ஆகியவை தங்களது இலக்கை காட்டிலும் அதிகமாக ஏ.டி.எம்.களை அமைத்துள்ளன. ஸ்டேட் வங்கி இதுவரை திட்டமிட்டதை காட்டிலும் குறைவாகவே ஏ.டி.எம்.களை நிறுவி உள்ளது. அதே வேளையில், தேனா வங்கி இன்னும் ஏ.டி.எம்.களை அமைக்கும் பணியில் ஈடுபடவில்லை.

1.39 லட்சம் ஏ.டி.எம்.கள்

2015 டிசம்பர் நிலவரப்படி, அரசு வங்கிகளுக்கு ெசாந்தமாக 1,39,366 ஏ.டி.எம்.கள் உள்ளன. கடந்த 2013-14-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படி, அரசு வங்கிகள் தங்களது ஒவ்வொரு கிளையிலும் ஏ.டி.எம். எந்திரத்தை நிறுவ வேண்டும்.

Leave a Reply