- செய்திகள், வணிகம்

ஏர் இந்தியா செயல்பாடு முன்னேற்றம்

 

கடந்த 4 ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் நிதி மற்றும் செயல்பாடு நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுள்ளதே இதற்கு காரணம். குறிப்பாக இந்தியன் ஏர்லைன்ைஸ ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைத்தது முதல் நிகர இழப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.7,560 கோடியாக இருந்தது. இது 2014-15-ஆம் நிதி ஆண்டில் ரூ.5,139 கோடியாக குறைந்துள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது சென்ற நிதி ஆண்டில் நிகர இழப்பு 22.5 சதவீதம் குறைந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ இதனை தெரிவித்தார்.

Leave a Reply