- செய்திகள், வணிகம்

ஏர் இந்தியா அதிரடி டிக்கெட் ரத்து கட்டணம் உயருகிறது

 

ஏர் இந்தியா நிறுவனம்,உள்நாட்டு விமான டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

பயணிகள் முன்பதிவு செய்த உள்நாட்டு விமான டிக்கெட் ரத்து செய்யும் போது  கட்டணத்தில் ரூ.1,500-ஐ தற்போது பிடிக்கப்படுகிறது. ஆனால், வரும் திங்கட்கிழமை (15-ந் தேதி)  முதல்  முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது ரூ.2 ஆயிரத்தை கழித்து  கொள்ளும். ஆக, ரத்து செய்வதற்கான கட்டணம் ரூ.500 உயர்த்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு  கடந்த வாரம் சுற்றுலா முகவர்களுக்கு  ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனம் நேற்று முன்தினம் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணத்தை ரூ.1,800-ல் இருந்து ரூ.1,899-ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply