- செய்திகள், தேசியச்செய்திகள்

ஏமனில் 25 பேர் பலி தற்கொலைப்படை தாக்குதல்

ஏடென், மே 16:- ஏமனில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தார்கள்.

ஏமனில் தென்கிழக்கில் அமைந்துள்ள துறைமுக நகரமான முகல்லாவில், போலீஸ் பணிக்கான ஆள் எடுப்பு முகாம் நேற்று நடந்தது. அப்போது, முகாமில் கலந்து கொண்டவர்களுள் ஒருவராக, ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன், தனது உடலில் வெடிகுண்டுகளை பொருத்தி உள்ளே நுழைந்துள்ளான். பின்னர், வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், 25 பேர் உயிரிழந்தார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. முகல்லா நகரமானது, ஓராண்டு காலமாக அல் கொய்தா தீவிரவாதிகள் வசம் இருந்தது. அதனை, அரசுப் படையினர் கடந்த மாதம் கைப்பற்றினர். இந்த வாரத்தில் மட்டும், ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தும் 2-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply