- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஏசுபிரான் போதித்த உயரிய குணங்களை மக்கள் பின்பற்றி சகோதரத்துவத்தோடு, ஒற்றுமையாக வாழவேண்டும்

சென்னை, மார்ச். 27-
ஏசுபிரான் போதித்த அன்பு, இரக்கம், பணிவு, ஈகை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஈஸ்டர் தின வாழ்த்து செய்தியில் கூறிஉள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் திருநாளையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
பகைவரிடமும் அன்பு

அன்பின் திருவுருவான ஏசுபிரான் ்உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக்கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். "உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" என்று போதித்த ஏசுபிரான், கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த தினத்தை புனிதவெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் திருநாளாகவும் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்து பிறரோடு உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
தியாக உணர்வு

இந்த நன்நாளில், உலகெங்கும் அன்பும்,அமைதியும் நிலவவும், மனிதநேயம் தழைக்கவும், ஏசுபிரான் போதித்த அன்பு, இரக்கம், பணிவு, ஈகை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, கிறிஸ்தவப்பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply