- செய்திகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராயம் கருத்தரங்கம் 2 நாட்கள் நடந்தது…

சென்னை,ஜூலை,26-
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் தமிழ்பேராயம் கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது.
இரு மொழி கருத்தரங்கு
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயமும் டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றமும் இணைந்து இக்கால தமிழ்ச் சமூகத்தில் ஊடகங்களின் பாதிப்பும் விளைவுகளும் என்ற தலைப்பில், இரு மொழி கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெற்றது.
தொடக்கவிழாவில் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் இர.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது.இந்த கருத்தரங்கு மாணவர்களுக்கு நன்கு பயன்படும்படி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஊடகங்களின் வளர்ச்சி
முனைவர் தி.பொ.கணேசன் பேசும்போது, ஊடகங்கள் சமுதாய வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருக்க வேண்டும் என்றார். தமிழ்பேராய செயலர் கரு.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.
அண்ணாபல்கலைக்கழகத்தின் இராமாநுசன் கணினி மையத்தின் முன்னாள் இயக்குநர் வி.சங்கரநாராயணன் பேசுகையில், ஊடகங்களின் வளர்ச்சியையும் இன்றைய சமூகத்தில் அவற்றின் பாதிப்புக்களையும் எடுத்துக்காட்டினார்.
4 அமர்வுகள்
கருத்தரங்கில் 4 அமர்வுகள் நடந்தன.இவற்றில் மாநில கல்லூரி ஆங்கில பேராசிரியர் கமலக்கண்ணன், தமிழ் இணைய கல்வி கழகத்தின் உதவி இயக்குநர் மு.தனலட்சுமி, உலக தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் ப.ராசா, சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் எஸ்.செல்வராஜ், சென்னை வானொலி நிலைய இயக்குநர் பழ.அதியமான், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் இணை  புலத்தலைவர் ஜே.ஜோதிகுமார், மற்றும் எஸ்.ஆர்.எம்.பேராசிரியர்கள் வி.செல்வகுமாரி,ஆர்.டி. பாலாஜி,வி.பிரபாகரன்,ஆர்.ராஜபிரபு, எஸ்.பிரபாகர்,ஆர்.ராஜேஷ், ஈ.பூவம்மாள் ஆகியோர்  ஆய்வு கட்டுரைகள் வழங்கினர்.
நிறைவு விழா
கருத்தரங்கின் நிறைவு விழாவுக்கு எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக பதிவாளர் நா.சேதுராமன் தலைமை தாங்கினார்.கவிஞர் ஈரோடு தமிழன்பன் சிறப்புரையாற்றினார். முடிவில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ம.செ.ரபிசிங் நன்றி கூறினார்.
—-
புட்நோட்
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ்பேராயம் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

Leave a Reply