- செய்திகள், வணிகம்

எல்.இ.டி. பல்பு விலை 55 ரூபாயாக குறைந்தது

 

சுரேஷ் கோயல் தகவல்
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் எல்.இ.டி. பல்பு விலை 55 ரூபாயாக குறைந்துள்ளது என்று மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

இடிஎனர்ஜிவேர்ல்டுடாட் காம் வலைதள தொடக்க விழாவில் கலந்து கொண்ட பியூஸ் கோயல் பேசுகையில் கூறியதாவது:-

இ.இ.எஸ்.எல். நிறுவனம் நடத்திய ஏல நடவடிக்கை கடந்த புதன்கிழமை முடிவுற்றது. அதில் எல்.இ.டி. பல்பை 55 ரூபாய்க்கு வழங்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன. எல்.இ.டி. திட்டத்தின் கீழ் இதுவரை 8.8 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எல்.இ.டி. பல்பு திட்டத்தின் முக்கிய இலக்கே மின்சார பயன்பாட்டை குறைப்பதுதான். சாதரண பல்புகளை காட்டிலும் 50 மடங்கும், சி.எப்.எல். பல்புகளை காட்டிலும் 10 மடங்கும் நீண்ட உழைப்பு கொண்டவை எல்.இ.டி. பல்புகள். எரிசக்தி, பணம் ஆகியவை அடிப்படையிலும் எல்.இ.டி. பல்புகள் ஆதாயமானவை என்று மத்திய அரசு ெதரிவித்துள்ளது.

Leave a Reply