- செய்திகள், வணிகம்

எரிவாயு உற்பத்தியை 2 மடங்கு அதிகரிக்க திட்டம் தர்மேந்திர பிரதான் தகவல்

 

கவுகாத்தி, பிப்.10:-

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியை அடுத்த 15 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தொலைநோக்கு பார்வை
வடகிழக்கு இந்தியாவுக்கான `ஹைட்ரோகார்பன் தொலைநோக்கு பார்வை 2030'-ஐ தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

வடகிழக்கு மாநிலங்களில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் பெரிய அளவில் உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த பகுதியின் முன்னேற்றத்துக்காக தனி ஆவணம் தயார் செய்ய முடிவு செய்தது.
ரூ.1.30 லட்சம் கோடி
இங்கு பெரிய அளவில் வளங்கள் குவிந்து உள்ள போதிலும்,  இந்த பகுதியை முன்னெடுத்து செல்ல சிறப்பு கவனம், முதலீடு தேவை.  வடகிழக்கு பகுதியில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியை 2 மடங்கு அதிகரிக்க `ஹைட்ரோகார்பன் தொலைநோக்கு பார்வை 2030' இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட அடுத்த 15 ஆண்டுகளில் வடகிழக்கு பகுதியில் ரூ.1.30 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்படும். குறிப்பாக அசாமில் அதிக அளவில் முதலீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply