- செய்திகள், வணிகம்

எம்.ஆர்.எப். லாபம் 20 சதவீதம் வளர்ச்சி

டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எப். கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.388 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2014 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் இது 20 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.323.51 கோடியாக இருந்தது. நிகர வருவாய் ரூ.3,256 கோடியாக குறைந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் வருவாய் ரூ.3,352 கோடியாக இருந்தது. 2014 அக்டோபர் 1 முதல் 2016 மார்ச் 31  வரையிலான காலத்தை இந்த நிதி ஆண்டாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.

Leave a Reply