- செய்திகள், வணிகம்

என்.சி.டி.சி. லாபம் ரூ.169 கோடி

 

தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (என்.சி.டி.சி.) நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பேசுகையில் கூறியதாவது:-
கடந்த 2014-15-ஆம் நிதி ஆண்டில் என்.சி.டி.சி. நிறுவனம் ரூ.169.30 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அந்த நிதி  ஆண்டில் ரூ.5,736 கோடி கடன் வழங்கியுள்ளது. இது அந்த நிதி ஆண்டுக்கான இலக்கை காட்டிலும் அதிகமாகும். அந்த நிதி ஆண்டில் ரூ.4,800 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நிகர வாராக் கடன் தொடர்ந்து பூஜ்ஜியமாக உள்ளது.
என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply