- செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு நாராயணசாமி வாழ்த்து புதுச்சேரி சட்டசபையில்…

புதுச்சேரி,ஆக 25-
புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி இருந்த இடத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்று, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் முதல் அமைச்சர்
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. காலை 9.25 மணிக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர்.
அதே நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை மைய மண்டபத்துக்கு வந்தனர்.
ரங்கசாமிக்கு முதல்வர் வாழ்த்து
அப்போது முதல்- அமைச்சர் நாராயணசாமி நேராக எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு சென்று அங்கு அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சட்டசபைக்கு வந்திருந்த அனைத்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.
சபாநாயகர் வாழ்த்து
இதே போல் சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கும், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply