- செய்திகள், வணிகம்

எச்.டி.எப்.சி. பேங்க் லாபம் ரூ.3,374 கோடி

 

நாட்டின் 2-வது பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. பேங்க் கடந்த நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) நிகர லாபமாக ரூ.3,374 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். மொத்த வருவாய் ரூ.18,863 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வாராக் கடன் 0.94 சதவீதமாக உள்ளது. நிகர வாராக் கடன் 0.3 சதவீதமாக உள்ளது. இவ்வங்கியின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு டிவிடெண்டாக ரூ.9.50 வழங்க பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply