- செய்திகள், வணிகம்

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் 14 சதவீதம் அதிகரிப்பு

 

ஐ.டி. சேவை நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,926 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 14.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில்  இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,683 கோடியாக இருந்தது. வருவாய் 15.4 சதவீதம் அதிகரித்து ரூ.10,698 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை-ஜூன் மாத காலத்தை நிதி ஆண்டாக கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.

Leave a Reply