- செய்திகள், வணிகம்

எகிறும் தபால் துறையின் மதிப்பு

புதுடெல்லி, ஏப். 5:-

இந்திய தபால்துறையை நவீனமாக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில்,  வங்கி, நிதிச்சேவை, பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் கூட்டு வைக்க 60-க்கும் மேற்பட்டசர்வதேச நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

நாட்டில் இப்போது, 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இதில் 1.3 லட்சம் தபால்நிலையங்கள் கிராமப்புறங்களில் இயங்கி வருகின்றன. தபால் துறையை நவீனப்படுத்தி, வங்கிச்சேவை, பணப்பரிமாற்றம், காப்பீடு, பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சேவையில் தபால்துறையுடன் இணைந்து பணியாற்ற ‘பார்க்லே’, ‘சிட்டிபாங்க்’, ‘டட்சே’ வங்கி, ‘வெஸ்டர்ன் யூனியன்’, விசா, ‘ஸ்டேட் வங்கி’, ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’ உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும், உலக வங்கி, சர்வதேச நிதிக்கழகம் ஆகியவையும் விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும், பி.என்.பி. பரிபாஸ், யூனியன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி எச்.எஸ்.பி.சி. ஆகிய நிறுவனங்கள் வங்கிச்சேவை அளிக்க ஆர்வமாக இருக்கின்றன.

அதேபோல, எச்.டி.எப்.சி லைப், ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்சியல், பஜாஜ் அலையன்ஸ், கோடக் லைப், ராயல் சுந்தரம், பி.என்.பி. மெட்லைப் உள்ளிட்ட பல காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு சேவையில் தபால்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து பணபரிமாற்றம் செய்யும் பிரிவுக்காக வெஸ்டர்ன் யூனியன், மொபைல் வாலட் திட்டத்துக்கு பி.எஸ்.என்.எல்., அமெரிக்காவின் விசா நிறுவனம் ஆகியநிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply