- செய்திகள், மாநிலச்செய்திகள்

ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குற்றஞ்சாட்டுவதா? அச்சுதானந்தனுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்

திருவனந்தபுரம், ஏப்.28-

என் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக  மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன் பொய்ப்பிரசாரம் செய்து  அவதூறு பரப்பி வருவதால், அவர்  மீது   தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்ேபாவதாக கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.

ரமேஷ் சென்னிதலா பேட்டி

கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ்சென்னிதலா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அச்சுதானந்தன் என் மீது திட்டமிட்டு வேண்டுமென்றே பொய்யான அவதூறுகளை பரப்பி வருகிறார். என் மீது 9 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் என் மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை. இதேபோல முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி மீதும் எந்த வழக்கும் இல்லை.  எனவே அச்சுதானந்தன் என்னைப்பற்றி பரப்பி வரும் அவதூறுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும்.

மேலும் உம்மன்சாண்டி மீது 31 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இதேபோல ஐக்கிய ஜனநாயக கூட்டணி (யு.டி.எப்.) அமைச்சர்கள் 18 ேபர் மீது 136 ஊழல் வழக்குகள் இருப்பதாகவும் அச்சுதானந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புகார் அளிக்க முடிவு

இதேபோல தனக்கு எதிராக பொய்ப்பிரசாரம் செய்து வரும் அச்சுதானந்தன் மீது உம்மன் சாண்டியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்ேபாவதாக அறிவித்துள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியாக இருந்து வரும் மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் வன்முறையைத்தான் நம்புகிறது.

சர்வாதிகார ஆட்சி அமையும்

மார்க்சிஸ்ட்  கட்சி வெற்றி பெற்று அக்கட்சியின் நிர்வாககுழு உறுப்பினர் பினராயி விஜயன் முதல்-அமைச்சரானால் கேரளாவில் சர்வாதிகார ஆட்சிதான் ஏற்படும்.

கேரளாவைப் பொறுத்தவரை ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்குதான் அனுகூலமான சூழ்நிலை இருந்து வருகிறது. கடந்த காலங்களைப்போல இந்த முறையும் பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. தேசிய அளவில் பா.ஜனதா பெரிய கட்சியாக இருந்தாலும் கேரளாவைப் பொறுத்த வரை அதற்கு செல்வாக்கில்லை.  இதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்.

ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளைை ஒன்றிணைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

இவ்வாறு கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறினார்.

Leave a Reply