- செய்திகள், விளையாட்டு

ஊழலற்ற உலக கோப்பை கிரிக்கெட்டாக திகழும்

மும்பை, மார்ச் 7:
இந்தியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஊழலற்ற ஒன்றாக இருக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு தலைவர் சர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் 8-ம் தேதி முதல் 20 ஓவர் உலக கோப்பைப் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் ஊழல் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் ரோனி மும்பை வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர், முழுவதுமாக ஊழலை ஒழித்துவிடமுடியாது என்று குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 58 ஆட்டங்கள் நடக்கின்றன. போட்டியின் முடிவுகள் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். இந்தப் போட்டி ஊழல் இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.

ஊழலைத் தடுப்பதுதான் தங்களின் இலக்கு என்ற அவர் ஊழல் தொடர்பான சந்தகேப்படும்படியான அணுகுமுறைகள் எதுவும் தெரிய வந்தால் அவற்றை உடனே தெரியப்படுத்துமாறு விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள், போட்டி அதிகாரிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் குற்றம் செய்தவர்களாக கருதப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply