- செய்திகள், விளையாட்டு

ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச அமைப்பு புதியவிளக்கம் மெல்டோனியம் ஊக்கமருந்து விஷயத்தில் ‘வாடா’ திடீர் பல்டி

மான்ட்ரியல், ஏப். 15:-

‘மெல்டோனியம்’ ஊக்கமருந்தை  பயன்படுத்தியவர்கள் உடம்பில் எத்தனை நாட்களுக்கு இந்த மருந்தின் தாக்கம் இருக்கும் என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தடை பெற்ற தடகள, விளையாட்டு வீரர்கள் தடையில் இருந்து தப்பிக்க முடியும் என்று  ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச அமைப்பு (W.A.D.A) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் இதுவரை 172 வீரர், வீராங்கனைகள் சிக்கியிருப்பதால், ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச அமைப்பின் இந்த உத்தரவு, வீரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சர்வதேச ஊக்கமருந்துக்கு எதிரான அமைப்பின் தலைவர் கிரெய்க் ரீடி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

‘மெல்டோனியம்’ எனும் ஊக்க மருந்து தடகள வீரர், வீராங்கனைகள் பயன்படுத்த 2016, ஜனவரி 1 ந் தேதியில் இருந்து தடை செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இதுவரை 172 பேர் சிக்கியுள்ளனர். குறிப்பாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா உள்ளிட்ட 40 ரஷிய வீரர், வீராங்கனைகள் அடங்குவர்.

இந்தநிலையில், மெல்டோனியம் மருந்தை எடுத்துக்கொண்டவர்கள் உடம்பில் அந்த மருந்து எத்தனை நாள் இருக்கும், எப்போது கழிவாக வெளியேறும்,  என்பது குறித்த அறிவியல் ரீதியான விளக்கம் இல்லை. அதலால்,  ஜனவரி 1ந்தேதிக்கு முன் ஒருவர் இந்த மருந்தை பயன்படுத்தி இருந்தால், அவரின் உடம்பில் இப்போதோ வரையோ அல்லது ஜனவரி 1-ந்தேதிக்கு பின்போ எத்தனை நாள் உடம்பில் கலந்திருக்கும் என்பது குறித்த தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஆதலால், மெல்டோனியம் மருந்து எடுத்துக்கொண்டதை வீரர், வீராங்கனையின் கவனக் குறைவு என்றே கருத வேண்டும்.

மெல்டோனியம் மருந்தை 1 மைக்ரோ கிராம் முதல் 15 ைமக்ரோகிராம் வரை உடலில் இருந்ததாக மார்ச் 1-ந்தேதிக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்டு  வீரர், வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இந்த மெல்டோனியம் மருந்து தொடர்பான விரிவான ஆய்வு அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ஷரபோவுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்து இம்மாத இறுதியில் சர்வதேச டென்னிஸ் அமைப்புடன், ரஷிய டென்னிஸ் சங்கம் பேச்சு நடத்த உள்ளது. சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் இந்த அறிவிப்பை ரஷிய அரசு வரவேற்றுள்ளது.

Leave a Reply