- செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் பிரேமலதா பேட்டி…

சென்னை, ஆக.26-
உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று பிரேம லதா விஜயகாந்த் தெரிவித்தார்.
விஜயகாந்தின் பிறந்த நாள் விழா நேற்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-
உள்ளாட்சி தேர்தல்
அவதூறு வழக்குகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கண்டித்ததை தே.மு.தி.க. வரவேற்கிறது. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. சமீப காலங்களாக சட்டசபையில் நடந்து வரும் நிகழ்வுகள் ஆளுங்கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது.
தே.மு.தி.க. மிகவும் பலமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார். விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி உலக வெப்பமயமாகுதலை தடுக்க 2½ லட்சம் மரக்கன்று நடப்படுகிறது.
இவ்வாறு பிரேம லதா  கூறினார்.

Leave a Reply