- செய்திகள், வணிகம்

உள்நாட்டில் விமானத்தில் சென்றவர்கள் 78 லட்சம் பேர்

 

கடந்த மார்ச் மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை 78.72 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர். இது முந்தைய பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 5.3 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் 74.76 லட்சம் பயணிகள் விமான சேவையை பயன்படுத்தி இருந்தனர். இண்டிகோ நிறுவனம் 38.4 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் முறையே 17.6 சதவீதம் மற்றும் 14.7 சதவீத சந்தை பங்களிப்புடன் உள்ளன.

Leave a Reply