- செய்திகள், மாவட்டச்செய்திகள்

உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து வருவதால் (வர்த்தகம்) நிலக்கரி இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த திட்டம் பியூஸ் கோயல் தகவல்

மும்பை, ஏப்.16:-
உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து வருவதால் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

சாதாரண நிலக்கரி

மும்பையில் கடல்சார் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பியூஸ் கோயல் பேசுகையில் கூறியதாவது:-

உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து வருவதால் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் முற்றிலுமாக சாதாரண நிலக்கரி  (தெர்மல் கோல்)  இறக்குமதியை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மிச்சமாகும். அதே சமயம் உயர்தர நிலக்கரி (கோக்கிங் கோல்) இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும்.

கோல் இந்தியா

கோல் இந்தியா நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு 53.60 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இதனால் இறக்குமதி குறைந்துள்ளது. இதனையடுத்து சென்ற நிதி ஆண்டில் ரூ.28 ஆயிரம் கோடிக்கு மேல் மிச்சமானது.

உள்நாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்துகின்றன. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சதாரண நிலக்கரியை முற்றிலும் இறக்குமதி செய்வதை நாம் நிறுத்த வேண்டும் இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கனவே நிலக்கரி இறக்குமதி குறைந்ததால் பல ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது.

100 கோடி டன்

உள்நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளது. 2019-ம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் ஆண்டு நிலக்கரி உற்பத்தி திறனை 100 கோடி டன்னாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
India to stop thermal coal imports; save Rs 40,000 crore

MUMBAI: In view of rising production of the dry fuel, India plans to completely stop thermal coal imports in 2-3 years that would result in annual savings of Rs 40,000 crore, Union Minister Piyush Goyal today said.

Coking coal, however, would need to be imported, the Coal and Power Minister said at the maiden Maritime India Summit here, adding that his Ministry was ready to tie up with Indian shipping companies for this purpose.

Record coal production by the world's largest coal miner CIL, helped India reduce its import bill of the dry fuel by more than Rs 28,000 crore in the last fiscal.

"I have no hesitation in saying that Indian companies used to import a lot of thermal coal. We want to completely stop the import of thermal coal in the next two to three years. We have already reduced imports by Rs 28,000 crore. We will save Rs 40,000 crore," Goyal said.

He said his Ministry was ready to enter into pacts with Indian shipping companies for import and transportation of coal.

"This is the time for Indians to buy ships, to invest in infrastructure. This is the time for Indian shipping companies to own ships. I am happy to do long term contracts with Indian shipping companies to transport our coal. Why don't we have a long-term contract," he said.

Goyal also proposed setting up a small private equity fund that would be handled by an international fund investor expert.

"We can have some base capital of about USD 250 million and this fund can provide equity to various organisations undertaking logistics through coastal shipping and inland waterways," he said.

"Lets look at innovative solutions," he added.

Goyal said if PSUs as well as the ministries of power, coal and others contributed to this, it will give confidence to the private sector to participate in this initiative.

"We could also raise about Rs 4,000 crore from international investors," he said.

Goyal said government is committed to ramping up Coal India Ltd's production to 1 billion tonne by 2019.

In 2015-16, the 'Maharatna' achieved a record production of 536 MT, which was 42 MT more than the previous fiscal. Its production grew by 8.5% year-on-year.

CIL, which accounts for over 80% of the domestic coal production, was however eying 550 MT in 2015-16.

Leave a Reply