- செய்திகள்

உளுந்தூர்பேட்டையா… உடுமலைப்பேட்டையா? குழப்பிய விஜயகாந்த்…

உளுந்தூர்பேட்டை, ஏப். 28- உளுந்தூர்பேட்டையில் வாக்கு சேகரித்த விஜயகாந்த், தான் போட்டியிடும் தொகுதி பெயரை மாற்றி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டையில் நேற்று விஜயகாந்த் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பிரசார வேனில் பேருந்து நிலையம் வந்தார்.  அங்கு கட்சி  தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை  தொகுதி மக்களே என்பதற்கு பதிலாக, ‘‘உடுமலைபேட்டை தொகுதி வாக்காளப் பெருமக்களே  என்றும் அண்ணன் வைகோவிற்கு பம்பரம் சின்னத்திலும், ஜி.கே.வாசனுக்கு  தென்னந்தோப்பு சின்னத்திலும் வாக்களியுங்கள்’’ எனவும் பேசினார்.  உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவதை மறந்து ம.தி.மு.க.,  மற்றும் த.மா.கா., தலைவர்களுக்கு விஜயகாந்த் வாக்குசேகரித்ததால்  தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

அடுத்து பேசிய பிரேமலதா, ‘‘உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் வெற்றி  பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் உளுந்தூர்பேட்டையில் அதிநவீன  வசதிகளுடன் கூடிய தரமான அரசு மருத்துவமனை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என தனித்தனியே அரசு கலைக்கல்லூரிகளை அமைக்கப்  பாடுபடுவார். விஜயகாந்த் எப்போதும் விவசாயிகளின் உற்ற தோழனாக இருப்பதால்  விஜயகாந்த் முதலமைச்சரானவுடன் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்துவதற்கான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்துவார்’’ என பேசினார்.

Leave a Reply