- செய்திகள்

உலக புலிகள் தின முகாம் முதுமலை காட்டில் இன்று…

கூடலூர், ஜூலை 29-
நீலகிரி மாவட்டம் முதுமலை காட்டில் உலக புலிகள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தெப்பக்காட்டில் உள்ள முகாமில் நடைபெறுகிறது.  கள இயக்குனர் சீனிவாசன்ரெட்டி தலைமை தாங்குகிறார்.  விழாவில் கார்குடி, மசினகுடி, ஆணைக்கட்டி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் ஜி.ஆர்.ஜி. மசினகுடி அரசுப்பள்ளி மாணவ -மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.  இதில் ரேஞ்சர்கள்  மற்றும் வனத்துறை ஊழியர்கள் ,பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply