- ஆன்மிகம், செய்திகள்

உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோவிலில்…

சென்னை, பிப். 13-
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக ‘108 திருவிளக்கு பூஜை’  தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நடந்தது. பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவைகளின் இயற்கை சீற்றங்களால் மக்கள் அவதிப்படுவதை தடுப்பதற்காக விளக்கு பூஜை நடத்தப்பட்டது.
இதை முன்னிட்டு மதியம் மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகமும், உற்சவர் அம்மனுக்கு மகா லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிரதான குத்துவிளக்கிற்கு  பட்டுப் புடவை சாத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 108 திருவிளக்குகளும் தனித்தனியே சுமங்கலிகளால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து விளக்குகளுக்கும் தூபதீப ஆராதனை செய்யப்பட்டு, சுமங்கலிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முண்டகக்கண்ணியம்மன் கோவில் துணைஆணையர் பெ.கோதண்டராமன், செயல் அலுவலர் து.சந்திரசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply