- செய்திகள், விளையாட்டு

உலக சாதனையை சமன் செய்தார் தீபிகா குமாரி வில்வித்தைப் போட்டி

ஷாங்காய், ஏப்.28:-

இந்தியாவைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் உலக வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. அதில் ஒரு கட்டத்தில் உலகத் தரப்பட்டியில் முதல் இடம் வகித்தவரும் காமன் வெல்த் சாம்பியன் போட்டியில் இரண்டு முறை பட்டம் வென்றவருமான இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி 72-ஆரோ பிரிவில் 686 புள்ளிகள் எடுத்து உலக சாதனையை சமன் செய்தார்.

முன்னதாக லண்டனில் 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கொரியாவின் கி போ 686 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். இந்த நிலையில் அந்த சாதனையை சமன் செய்துள்ளார் தீபிகா.

முன்னதாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் கி போ 682 புள்ளிகள் எடுத்து 11 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply