- செய்திகள், வணிகம்

உலகின் டாப் 100 சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

நியூயார்க், ஏப்.23:-

உலகின் டாப் 100 சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உள்பட பல இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

டைம் வாரஇதழ் ஆண்டுதோறும் பொருளாதாரம், கலை, அரசியல், வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் உலகின் அதிக சக்தி மிக்கவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உலகின் டாப் 100 சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், இந்தியாவிலிருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிளிப்கார்ட் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்க இசை அமைப்பாளர் லின் மேனுவல் மிரிண்டா, பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா, ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Leave a Reply