- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.19 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

சென்னை, ஏப்ரல் 5-
ஏப்ரல் 2-ந் தேதி வரை, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.19 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சுவர் விளம்பரங்கள் அழிப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடைமுறைகளையொட்டி, தமிழகத்தில் தேர்தல் விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 4-ந் தேதி வரை பொது சொத்தில் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர் கட்டி சேதம் ஏற்படுத்தியதாக பெறப்பட்ட 2 லட்சத்து 3,328 புகார்களில் ஒரு லட்சத்து 98,280 புகார்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ததாக பெறப்பட்ட 80,799 புகார்களில் 72,968 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

ரூ.19 கோடி பறிமுதல்

ஏப்ரல் 2-ந் தேதி வரை பறக்கும்படை சோதனையில் மொத்தம் ரூ.8.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நிலையான கண்காணிப்புக் குழுவினரால் 2-ந் தேதி வரை ரூ.10.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை மீறி அருசியல் தலைவர்களின் புகைப்படத்துடன் வழங்குவதற்கு தயாராக இருந்த நோட்டுப் புத்தகங்கள், சுவர்களில் கட்சி விளம்பரம் செய்தது, வேறு கட்சியினரை நாகரீகமற்ற வார்த்தைகளில் பேசி கட்சிகளுக்கு இடையே விரோத மனப்பான்மையை உரவாக்கியது உள்ளிட்ட காரணங்களால் சேலம், மதுரை, சென்னை மாவட்டங்களில் அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply