- செய்திகள், மாநிலச்செய்திகள்

உத்தரகாண்டில் குடியரசு தலைவர் ஆட்சி தற்காலிகமானதுதான்:

புதுடெல்லி, ஏப்.23-

உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுதலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால், கவர்னர் அறிக்கைக்கு பிறகு சட்டப்பேரவையை கூட்டலாம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு பேட்டி

உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து நேற்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு நிருபர்களிடம் கூறியதாவது-

உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தற்காலிகமாகத்தான் கொண்டு வரப்பட்டது. எனவே உயர்நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கியுள்ளதால் கவர்னர் அறிக்கை தாக்கல் செய்தபின் சட்டப்பேரவையை கூட்டலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிதி மசோதா நிறைவேறாததன் காரணமாக  அரசியல் சட்டம் முடங்கியதை மத்திய அரசு உணர்ந்துதான் அங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் காரணமாகத்தான் அங்கு 356-வது சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டமன்றம் கலைக்கப்பட வில்லை. தற்காலிகமாகத்தான் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. எனவே எந்த நேரத்திலும் சட்டமன்றத்தை கூட்டலாம்.

சட்டத்தை மதிக்கிறோம்

கவர்னர் அறிக்கை வரவேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எப்போதுமே சட்டத்தையும்,  அரசியல் சட்ட அமைப்பையும் மதித்து வருகிறோம்.

ஒருபுறம் மாநில அரசு நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறது. மற்றொருபுறம் சில எம்.எல்.ஏக்கள் அவர்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டுள்ளதால்  தகுதி நீக்கம் செய்துள்ளதாக சபாநாயகர் கூறுகிறார். எனவே இந்த இரண்டு விஷயங்கள் எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும். இதனால் அங்கு குழப்பமும் முரண்பாடுகளும் தோன்றியது. இந்த குளறுபடிகள் களையப்பட வேண்டும்.

பலப்பரீட்சை சாத்தியமா?

9  எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 29-ந்தேதி  சட்டமன்றத்தில் எவ்வாறு பலப்பரீட்சை நடத்தமுடியும். தகுதி நீக்கம்  செய்யப்பட்ட எம்.எல்.ஏ எவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள  முடியும். நம்பிக்கை வாக்கெடுப்பு பலப்பரீட்சை நேர்மையாகவும், பாரபட்சமற்ற  வகையிலும் நடத்தப்பட வேண்டும்.

நீங்கள் உங்களுக்கு எதிரான 9  எம்.எல்.ஏக்களை தகுதியிழக்க  செய்துள்ளீர்கள். ஆனால் உங்களுக்கு  பெரும்பான்மை இருப்பதாக கூறுகிறீர்கள். இது  உண்மைக்கு மாறாகவும், ஜனநாயக ெநறிமுறைகளுக்கும் எதிரானதாகவும் உள்ளது. இது ேமலும் முரண்பாடுகளையும்,  குழப்பத்தையும் காட்டுகிறது. இந்த நிலைமை சீராக வேண்டும்.

மெஜாரிட்டி இழந்துள்ளார்

இந்த பிரச்சினைகளை  உ்ச்சநீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்கும் என்று  நம்புகிறேன்.இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம். எங்களைப்  பொறுத்தவரை அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைதான்  உத்தரகாண்ட் மாநிலத்தில் 356 வது பிரிவை பயன்படுத்தவேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் தனது ெமஜாரிட்டியை இழந்துவிட்டார்.   நீதிக்கு எதிராகவும் நேர்மையற்ற முறையிலும் அவர் நடந்துகொண்டது தொலைக்காட்சியிலும்  பதிவாகியுள்ளது. ஆனால் இதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டு தாங்கள் நேர்மையானவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு வெங்கையாநாயுடு கூறினார்.

Leave a Reply