- செய்திகள்

உதவித்தொகை வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் அருகே…

காஞ்சிபுரம், ஜூலை.29-
காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் முதியோர் விதவை, மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதர் சங்கம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாய வாலியர் சங்கம் ஆகியவை சார்பில் உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ரமேஷ் தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் மல்லிகா, மாவட்ட செயலாளர்கள் பிரமிளா, புருஷோத்தமன், தமிழரசி, நந்தன், மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரபட்சமின்றி வழங்கிட
நிறுத்தப்பட்ட முதியோர், ஆதரவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உடனடியாக வழங்குவது, 60 வயதான அனைவருக்கும் பாரபட்சமின்றி உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உதவித்தொகையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply