- செய்திகள், மாநிலச்செய்திகள்

உஜ்ஜைனுக்கு 2 ஆயிரத்து 100 சிறப்பு ரயில்

 

புதுடெல்லி, ஏப். 27-

சிம்ஹஸ்தா கும்பமேளாவை முன்னிட்டு உஜ்ஜைன் நகருக்கு 2 ஆயிரத்து 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜாம்ஷெட் இதனை டெல்லியில் தெரிவித்தார். இந்த கும்ப மேளாவில் பங்கேற்பதற்காகவும், இங்குள்ள ஷிப்ரா நதியில் புனித நீராடுவதற்காகவும், உஜ்ஜைன் நகருக்கு 5 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 22ந் தேதி இங்கு இவ்விழா தொடங்கியது. அடுத்த மாதம் 21ந் தேதி வரை கும்பமேளா நடைபெறும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில் கடந்த முறை 864 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டன. இந்த முறை 233 சதவீதம் கூடுதல் ரயில்கள் இயக்கப் படுவதாக அவர் தெரிவித்தார். கூடுதல் ரயில் தவிர மருத்துவ வசதி செய்யப் பட்டுள்ளதாகவும், பக்தர்களை ஒழுங்கு படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் 700 பேர் நியமிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 61 தீயணைப்பு கருவிகளும் ரயில்வே துறை சார்பில் ஆங்காங்கு வைக்கப் பட்டுள்ளன என்றார் அவர்.

Leave a Reply