- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை மக்கள் பாடம் புகட்டுவார்கள்

சென்னை, ஏப்.6-
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ள மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ஈ.வெ.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அலட்சியம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் அதனுடைய பயன்களை மக்களுக்கு போய்ச் சேரவிடாமல்  மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தி உள்ளது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19ஆகவும், டீசல் விலை ரூ.1 ஆகவும், உயர்த்தியிருக்கிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலமுறை எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். அதை அலட்சியப்படுத்தும் வகையில் தொடர்ந்து விலை உயர்வை நரேந்திர மோடி அரசு அறிவித்து வருகிறது.
பா.ஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 115 டாலராக இருந்தது, தற்போது 39 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.30ஆகவும், டீசல் விலை ரூ.20ஆகவும் விற்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்று சென்னையில் பெட்ரோல்  பொருட்களின் விலை ஏறுவதோடு பணவீக்கத்திற்கும் வழிகோலுகிறது.
செல்வாக்கை இழக்கும்
நரேந்திர மோடி அரசு வசதி உள்ளவர்கள் பயன்படுத்துகிற விமானப் போக்குவரத்திற்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40 மானிய விலையில் வழங்குகிறது. ஆனால், வாக்களித்த மக்களுக்கு வழங்குகிற பெட்ரோல் ரூ.60க்கும் மேலாக உயர்த்துவது நியாயமா?   பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகி மத்திய அரசு செல்வாக்கு இழக்கிற நிலை இன்றைக்கு உருவாகி வருகிறது. இதற்கு நாட்டுமக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply