- செய்திகள், தேசியச்செய்திகள்

ஈராக்கில் பயங்கரம் இயற்கை எரிவாயு தொழிற்சாலையை குறி வைத்து தாக்குதல் 11 பேர் உடல் சிதறி பலி

பாக்தாக், மே 16-
ஈராக்கில், இயற்கை எரிவாயு தொழிற்சாலையை குறி வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள்.
தற்கொலைப் படை தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாக்கில் இருந்து 20 கிலோ மீட்டர் வடக்கில் அமைந்துள்ள நகரம் தாஜி. இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு (கியாஸ்) தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் முதன்மை வாயிற்கதவில் (கேட்) வெடிக்குண்டு நிரப்பப்பட்டிருந்த கார் ஒன்று வந்த வேகத்தில் மோதியது.
இதையடுத்து பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியது. இதில் வாயிற்கதவில் காவலுக்கு நின்ற, 15 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதைதொடர்ந்து அந்த பகுதிக்கு மேலும் சில தற்கொலைப் படை தீவிரவாதிகள் புற்றீசல் போல் வந்த வண்ணம் இருந்தனர்.
11 பேர் பலி

இதில் தொழிலாளர்கள் உள்பட 11 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். இந்த தகவலை போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர். எனினும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவலை வெளியிடவில்லை. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தங்கள் கைவசம் இருந்த பெரும்பாலான இடங்களை தீவிரவாதிகள் இழந்து விட்டனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவ்வப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
———–

Leave a Reply