- உலகச்செய்திகள், செய்திகள்

ஈக்வடார் பூகம்ப பலி 650 ஆக அதிகரிப்பு

 

குயிட்டோ, ஏப். 25:-

ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. பூகம்பத்தில் சிக்கிய58 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஈக்வடாரின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், பாலங்கள் இடிந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.  பேரழிவை ஏற்படுத்திய இந்த நில அதிர்வில் இதுவரை 650 பேர் பலியானார்கள், 58 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இடிபாடுகளில் இருந்து இதுவரை 113 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வீடுகள், ஓட்டல்கள் இடிந்ததில், ஏற்குறைய 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகள் இழந்து முகாம்களில் வசிக்கிறார்கள். இந்த பூகம்பத்தால், ஏறக்குறைய ஈக்வடார் அரசுக்கு 300 கோடி டாலர் (ரூ.20ஆ யிரம் கோடி) அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply