- உலகச்செய்திகள், செய்திகள்

ஈக்வடார் பூகம்பம்; மீட்புப் பணிகள் தீவிரம்

 

பெடர்நல்ஸ் ஏப். 20:-

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிரோடு இருப்பவர்களை மீட்கும்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈக்வடாரில் பசிபிக் கடற்பகுதியை ஒட்டி உள்ள நகரங்களில் சனிக்கிழமை இரவு 7.8புள்ளி ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் வீடுகள், ஓட்டல்கள், பாலங்கள் இடிந்துவிழுந்தன, சாலைகள் பிளந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்படையினரும், போலீசாரும், ராணுவத்தினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மான்டா நகரில் 2 நாட்களுக்குப் பின், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்று மீட்புப்படையினர் தெரிவித்தனர். மேலும், மீட்புப்பணியில் உதவுவதற்காக தன்னார்வ நிறுவனங்கள், அண்டை நாடுகள் மீட்புக் குழுக்களையும், மருந்துகளையும் அனுப்பி இருக்கின்றன.

இதற்கிடைய பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்ட அதிபர் ரபேல் கோரியா கூறுகையில், “ சேதத்தின் மதிப்பு கோடிக்கணக்கான டாலர்களைத் தாண்டும். ''  என்று தெரிவித்தார்.

Leave a Reply