- உலகச்செய்திகள், செய்திகள்

இளவரசர் பிலிப்புடன் காதலில் விழுந்தது எப்படி?

லண்டன், ஏப். 25:-

இங்கிலாந்து ராணி எலிசபெத், தானும், தனது கணவர் இளவரசர் பிலிப்பும் எப்படி காதலில் எப்படி விழுந்தோம்? என்று கைப்பட எழுதிய 2 காதல் கடிதங்கள் ரூ.13.5 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகின.

இது எதிர்பார்த்த விலையைக் காட்டிலும், 18 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதில் எழுதிய கடிதம்

ராணி எலிசபெத் தனது 21-வயதில் திருமணத்துக்கு முன்பு, தங்களது காதல் குறித்து  கடந்த 1947-ம் ஆண்டு பெட்டி ஷீவ் என்பவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதமே தற்போது விற்பனை செய்யப்பட்டது.

இரு பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தில், இளவரசர் பிலிப்பும், எலிசபெத்தும் எப்படி சந்தித்தார்கள், இருவரையும் புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க எப்படி துரத்தினார்கள், அவர்களிடம் இருந்து , பிலிப்பின் ஸ்போர்ட்ஸ் காரில் தப்பியது, லண்டன் நைட் கிளப்புகளில் நடனமாடியது, தனது திருமண மோதிரம் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பதிவுசெய்துள்ளார்.

இந்த கடிதம் முதலில் ரூ.38 ஆயிரத்துக்கும்(400 பவுண்ட்), அதன்பின் ரூ.1.15 லட்சத்துக்கும்(1200 டாலர்) விற்பனையாக இருந்து, கடைசியாக ரூ. 13.5 லட்சத்துக்கு(14 ஆயிரம்பவுண்ட்) ஏலம் போனது.

கவுரவம்

ராணியின் காதல்கடிதத்தை ஏலத்தில் விற்பனை செய்த சிப்பன்ஹம்  ஏல நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் எட்மான்ட்ஸ் கூறுகையில் “ இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தை விற்பனை செய்ய வாய்ப்பு கிடைத்தது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரமாகும். குறிப்பாக ராணியின் 90-வது பிறந்தநாள் கொண்டாடும்போது இந்த வாய்ப்பு  கிடைத்துள்ளது'' என தெரிவித்தார்.

Leave a Reply