- செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை அயனாவரத்தில், காதலனால் ஏமாற்றப்பட்ட…

வில்லிவாக்கம், ஆக.18-

சென்னை அயனாவரம் பில்கிளிண்டன் சாலையை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மகள் ஜெனிப்பர் (வயது 21). ஜெனிப்பர் அதேப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவர் பெற்றோரை பிரிந்து காதலனுடன் சென்றார். காதலன் ஜெனிப்பரை கர்ப்பமாக்கி கழற்றி விட்டார். நிறைமாத கர்ப்பிணியான ஜெனிப்பரை பெற்றோர்கள் சேர்த்துக் கொண்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

காதலித்து, குழந்தையும் கொடுத்துவிட்டு காதலன் ஏமாற்றியதால் விரக்தியில் இருந்து வந்த ஜெனிப்பர் கடந்த 12-ந் தேதி இரவு வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனே இதைப் பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு கீழப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெனிப்பர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் வழக்குப்பதிவு செய்து, ஜெனிப்பரை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

—-

Leave a Reply