- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

இல.கணேசன் 71வது பிறந்தநாள் அத்வானி, அமித்ஷா, கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து

தியாகராயநகர், பிப். 17: பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் இல.கணேசனின் 71வது பிறந்தநாளையொட்டி அவருக்கு கட்சி தலைவர்கள் அத்வானி, அமித்ஷா, கருணாநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனுக்கு நேற்று 71-வது பிறந்தநாள். இதையொட்டி மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி அவர் தரிசனம் செய்தார்.
பிறந்தநாளையொட்டி கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மாசுவராஜ், வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் இல.கணேசனுக்கு போனில் வாழ்த்து தெரிவித்தனர்.   கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இல.கணேசன் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொகுதி பொறுப்பாளர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் இல.கணேசனுக்கு ஆளுயரமாலை அணிவித்து மலர் கிரீடம் சூட்டினார்.

பின்னர் இல.கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று கட்சியினர் மத்தியில் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு, துணைத்தலைவர் வானதி சீனிவாசன், எச்.ராஜா, சவேரா சக்கரவர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

படவிளக்கம்: இல.கணேசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர்
ஆளுயர மாலை அணிவித்து மலர்கிரீடம் சூட்டியபோது எடுத்தபடம்.

Leave a Reply