- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

இலவச மின்சாரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை கனிமொழி எம்.பி. பேட்டி…

திருச்சி,மே15-இலவச மின்சாரம் மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
வளர்ச்சி அடைய…

திருச்சியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்ததார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் தொழிற்துறை, விவசாயம், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் தொழில்துறை, விவசாயம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது சாத்தியம் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும். அப்போது மதுபான ஆலைகளும் மூடப்படும்.
தி.மு.க. சம்பந்தப்பட்டவர்களாக அல்லது அவர்களின் உறவினர்களின் ஆலைகளாக இருந்தாலும் நிச்சயமாய் மது ஆலைகள் மூடப்படும்.
தாக்கம் இல்லை
மேலும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் சாத்தியமற்றது. அவரது ஆட்சி காலத்தில் 3 முறை மின்கட்டணத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. எனவே அவர் இலவச மின்சார அறிவிப்பை மக்கள் ஏற்காததால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அ.தி.மு.க. பொதுகூட்டங்களுக்கு சென்று 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் இலங்கை கடற்படை தளம் அமைக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply