- சினிமா, செய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `பார்க்கணும் போல இருக்கு

`வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, தொட்டால் தொடரும்' படங்களை தயாரித்த எப்.சி.கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிக்கும் படம் `பார்க்கணும் போல இருக்கு.' இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. புதுமுகம் பரதன் நாயகனாக அறிமுகம் ஆகிறார். நாயகியாக திரிஷ்யம் மலையாளப் படத்தில் நடித்த ஹன்சிபா நடிக்கிறார். தமிழில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பரஞ்சோதி படங்களிலும் நடித்திருக்கிறார்.

காமெடிக்கு சூரி. கஞ்சாகருப்பு, பிளாக்பாண்டி, முத்துக்காளை, சிங்கப்பூர் துரைராஜ் என பெரிய நகைச்சுவைப் பட்டாளமே இருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார்.

சுதா படத்தொகுப்பை கவனிக்க , அருள்தேவ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார், எஸ்.பி.ராஜ்குமார். இவர் `பொன்மனம் ஏன்புருஷன் குழந்தை மாதிரி, சுறா, பட்டய கிளப்பணும்பாண்டியா' படங்களை  இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டால், “இது நகைச்சுவை கலந்த காதல் படம். படத்தில் இடம் பெறும் பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது. குறிப்பாக `ரெட்டை சடை கூப்பிடுது முத்தம்மா' என்ற பாடல் இப்போதே இளைஞர்களின் கொண்டாட்டப் பாடலாகி விட்டது'' என்கிறார், இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.

Leave a Reply