- செய்திகள், தூத்துக்குடி, மாவட்டச்செய்திகள்

இரும்பு வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் கோவில்பட்டி அரசு பேருந்தில் சோதனை…

நெல்லை, ஏப்.20-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாற்கர சாலையில் ஆவல்நத்தம் விலக்கு அருகில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அந்த வழியாக நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி அகமது அமீது (42) ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தைப் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், திருவைகுண்டம் அடுத்த தென்திருப்பேரை அருகே உள்ள கேம்பலாபாத் பிரதான சாலையில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில்,  சென்னையைச் சேர்ந்த ஆபத்தான் மகன் ரமேஷ்குமார் (42) என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.95 ஆயிரம் எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply