- செய்திகள், விளையாட்டு

இரண்டாம் இடம் பிடித்தார் சாகேத் டெல்லி ஓபன் டென்னிஸ்

புதுடெல்லி, பிப்.22:-
டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மினேனி பட்டத்தை இழந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டி இங்கு நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சாகேத் தோல்வியைத் தழுவினர். இதையடுத்து அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.

இந்தப் போட்டியின் 5-ம் இடத்தில் உள்ள சாகேத் 3-6, 0-6 என்ற நேர் செட்களில் பிரான்சு வீரர் ஸ்டெபனே ராபர்ட்டிடம் தோல்வி கண்டார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததது.

இந்திய வீரர் சாகேத்துடன் மோதியது மிகவும் சவால் நிறைந்ததாக இருந்ததாக ராபர்ட் தெரிவித்தார்.

2010-ம் ஆண்டு உலகத் தரப்பட்டியலில் 61-ம் இடத்தை அடைந்த ராபர்ட் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மூன்றாவது சுற்றுவரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துவக்கத்திலேயே பதற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கிய சாகேத்தால் தொடர்ந்து சரியாக ஆட முடியாமல் போனது. முதல் செட்டில் ஓரளவுக்கு ஆடினாலும் கூட இரண்டாவது செட்டில் ஒரு கேமை கூட கைப்பற்றவில்லை.

நேற்று முன் தினம் நடைபெற்ற இரட்டையர் போட்டியிலும் சாகேத் ஜோடி பட்ட வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply