- செய்திகள், தேசியச்செய்திகள்

இனி காப்பீடு கையில் வைத்திருக்க தேவையில்லை வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி

புதுடெல்லி, ஜன. 14:

கார், இரு சக்கரவாகனங்கள் உள்ளிட்ட அனைத்து ரக வாகன ஓட்டிகளுகும் எப்போதும் தங்களுடனே வாகனத்துக்கான காப்பீடை வைத்திருக்க தேவையில்லை. அதற்கு மாற்றாக டிஜிட்டல் வடிவிலான காப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சோதனை கட்டமாக தெலுங்கானா மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது விரைவில் அடுத்த மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் (இரிடா) `இ-வாகன் பீமா' என்ற டிஜிட்டல் வடிவத்தில் அறிமுகம் செய்துள்ளது.
பாலிசியின் 10 சிறப்பு அம்சங்கள்
1. `இ.வாகன் பீமா' என்பது காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் கியூ.ஆர். (உடனடி தகவல் அளிக்கும்) கோடு இணைந்த டிஜிட்டல் வடிவலான மோட்டார் காப்பீடு ஆகும். அந்த பார் கோடை டைப் செய்தால் பாலிசி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2. போக்குவரத்து போலீசார் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால்,  காப்பீடு நிறுவனம் அல்லது மத்திய காப்பீடு தகவல் பிரிவின் தகவல் தளத்தில் இருந்து பாலிசிதாரரின் விவரங்களை பெறலாம்.
3. டிஜிட்டல் வடிவலான காப்பீடு பாலிசிகளை வழங்குமாறு காப்பீடு நிறுவனங்களை ‘இரிடா’ கேட்டுக்கொண்டுள்ளது. 2015 டிசம்பர் 1 முதல் தாள் வடிவிலும், டிஜிட்டல் வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது.
4. இந்த டிஜிட்டல் காப்பீடுகளில் மோசடி செய்ய வாய்ப்பு இல்லை. ‘பார் கோடு’ மூலம் போலிகளை எளிதாக கண்டு பிடித்து விடலாம்.
5. மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி, மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் வண்டி ஒட்டுவது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
6. புதிய அல்லது புதுப்பிக்கும் பாலிசிகள் டிஜிட்டல் வடிவில் பாலிசிதாரர்களுக்கு அனுப்பப்படும். ஸ்மார்ட்ேபான்களால்   இந்த டிஜிட்டல் காப்பீட்டை படிக்க முடியும்.
7. பாலிசிதாரரிடம் இ-மெயில் வசதி இல்லை என்றால் அவருக்கு பாலிசி விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.
8. டிஜிட்டல் வடிவில் பாலிசிகள் வழங்குவதால் செலவு குறையும். அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவும்.
9. டிஜிட்டல் வடிவத்தில் பாலிசி வழங்கினால், காப்பீடு பாலிசிகள் இல்லாத ரசீது சார்ந்த குறைகள் குறையும், நிறுவனங்கள் செயல்பாட்டு செலவினம் குறையும் என்று பாலிசி பஜார் டாட் காம் நிறுவனத்தின் துணை தலைவர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.

10. டிஜிட்டல் வடிவில் வாகன காப்பீடு வழங்கினால் காப்பீடு ஒழுங்குமுறை அமைப்புக்கு  வாடிக்கையாளர்  விவரம் (கே.ஒய்.சி.) தேவை இருக்காது.

Leave a Reply