- செய்திகள், வணிகம்

இந்திய மூலதன சந்தையில் அன்னிய முதலீடு ரூ.12,970 கோடி

 

புதுடெல்லி, ஏப்.25:-
இந்த  மாதத்தில் இதுவரை இந்திய மூலதன சந்தையில் (பங்குகள், கடன்பத்திரங்கள்)  அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.12,970 கோடி முதலீடு செய்துள்ளனர்.

இம்மாதம்  1 முதல் 22-ந் தேதி வரை அன்னிய  முதலீட்டாளர்கள் நம் நாட்டு பங்குகளில்  ரூ.6,734 கோடியும்,  கடன்பத்திரங்களில் ரூ.6,236 கோடியும் முதலீடும்  செய்துள்ளனர். இதனையடுத்து  அவர்கள் நம் நாட்டு மூலதன சந்தையில் மேற்கொண்ட  நிகர முதலீடு ரூ.12,970  கோடியாக உள்ளது.

அன்னிய  முதலீட்டாளர்கள் நம் நாட்டு மூலதன சந்தையில் கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில்  ரூ.41,661 கோடியை விலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட நிதிக்கொள்கை ஆய்வறிக்கையில் முக்கிய வட்டி விகிதங்களை குறைத்தது. இனி வரும் ஆய்வறிக்கைகளிலும் வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டு பங்குகள், கடன்பத்திரங்களில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.

Leave a Reply