- செய்திகள், வணிகம்

இந்திய மூலதனச் சந்தையில் அன்னிய முதலீடு ரூ.7,600 கோடி

புதுடெல்லி, ஏப்.11:-

அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதத்தில் இதுவரை இந்திய மூலதன சந்தையில் (பங்குகள், கடன்பத்திரங்கள்) மொத்தம் ரூ.7,600 கோடி முதலீடு செய்துள்ளனர். தொடர்ந்து 2-வது மாதமாக அவர்கள் நமது மூலதனச் சந்தையில் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 4 மாதங்களில் அவர்கள் மூலதனச் சந்தையில் இருந்து மொத்தம் ரூ.41,661 கோடியை விலக்கி இருந்தன. கடந்த மார்ச் மாதத்தில் இந்திய பங்குகள், கடன் பத்திரங்கள் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.19,967 கோடி முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இம்மாதத்தில் 7-ந் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் ரூ.3,469 கோடியும், கடன்பத்திரங்களில் ரூ.4,152 கோடியும் முதலீடு செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் நமது மூலதன சந்தையில் மேற்கொண்ட முதலீடு ரூ.7,625 கோடியாக உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கையில் வட்டி விகிதங்களை குறைத்ததே நம் நாட்டு மூலதனச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்தற்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply