- செய்திகள், விளையாட்டு

இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி ஆசிய ஸ்குவாஷ் போட்டி

சீன தைபே, மே 16:-

ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

சீன தைபேயில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

முன்னதாக மலேசியாவின் சிவசங்கரி சுப்பிரமணியம் 11-7, 11-6, 12-10 என்ற கணக்கில் இந்தியாவின் சசிகா இங்கலேயை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதையடுத்து இரண்டாவது ஆட்டத்தில் டெலியா அர்னால்ட் 9-11, 13-11, 11-8, 11-9 என்ற கணக்கில் ஜோஸ்னா சின்னுப்பாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதையடுத்து ராசெல் அர்னால்ட், தீபிகா பல்லிகல் இடையிலான போட்டி நடைபெறவில்லை.

Leave a Reply