- செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் விலைவாசி உயர்வை கட்டுபடுத்தகோரி…

காஞ்சிபுரம், ஆக.19-
விலைவாசி உயர்வை கட்டுபடுத்தகோரி காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், காஞ்சிபுரம் காவலான் கேட் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் நாராயணசாமி தலைமை வகித்தார்.
கட்டுப்படுத்த
இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தியாவசிய பண்டங்கள்-பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை நியாய விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கச்செய்ய வேண்டும். மண்ணெண்ணை விலையை மாதம் தோறும் லிட்டருக்கு 25 காசு வீதம் உயர்த்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும்.
தடுப்பணை
பாதுகாப்புத்துறை உள்ளிட்ட 9 பொதுத்துறை நிறுவனங்களில் நூறு சதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே, மழை, வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பிற்குரிய நிவாரணம் வழங்கு, பாலாற்றில் தமிழகத்தின் தண்ணீரை தடுக்கும் தடுப்பணைகளை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
100-க்கும்
இதில் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.  மாவட்ட செயலாளர் மேகநாதன், மாவட்ட துணை செயலாளர் எல்லப்பன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

படம் உள்ளது.

Leave a Reply