- செய்திகள்

இந்திய அளவில் ‘ஆவின்’ 7-ம் இடத்தில் உள்ளது

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் முன்பு நாளொன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 40.28 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல் பால் விற்பனையும் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 22.89 லட்சம் லிட்டரிலிருந்து தற்போது 25 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு 25 லட்சம் லிட்டர் விற்பனைஇதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-“பால் உற்பத்தியில் தமிழ்நாட்டில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் சேவையில் ஆவின் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

ஆவின் நிறுவனம் இதுவரை அதிகபட்சமாக 6% கொழுப்புச் சத்து மற்றும் 9% இதர சத்தும் உள்ள பாலை மட்டும் விற்பனை செய்த நிலையில் 6.5 % மற்றும் 9% புரதச் சத்து கொண்ட “டீமேட்” என்ற புதிய வகைப்பாலை வர்த்தக ரீதியில் டீக்கடைகள், ஓட்டல்கள் , சமையல் வல்லுநர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.நவீன காலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி, சுவைத்துச் சாப்பிடும் வகையில் மாம்பழம் மற்றும் சாக்லெட் சுவை கூடிய லஸ்ஸியை விற்பனைக்கு வழங்கியுள்ளது ஆவின் நிறுவனம்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 230 லட்சம் லிட்டர் பாலில் ஆவின் நிறுவனம் 40 லட்சம் லிட்டர் அதாவது 17 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்து மீதமுள்ள 83 சதவீதம் பாலில் உள்ளுர் தேவைக்காக 17% போக 16% தனியார் பால் நிறுவனங்கள் மூலமாகவும் 50% அமைப்புசாரா விற்பனையாளர்கள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் 155 பால் கூட்டுறவு சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டும் 139 செயலிழந்த சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டும் தற்போது 9,266 பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் முன்பு நாளொன்றுக்கு 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது நாளொன்றுக்கு 40.28 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

அதேபோல பால் விற்பனையும் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 22.89 லட்சம் லிட்டரிலிருந்து தற்போது 9.21 சதவீதம் உயர்ந்து நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.,ஆவின் நிறுவனத்தின் தொடர் முயற்சியில் 495 விற்பனை முகவர்களை நியமித்து ‘சோமாட்டோ’, ‘ஸ்விக்கி’ மற்றும் ‘டன்சோ’ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பால் பொருட்களை விற்பனை மேற்கொள்ளுதல் மூலம் கொரோனா காலத்திற்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு ரூ.34.78 கோடி என்ற மதிப்பு தற்போது ரூ.41.15 கோடிக்கு உயர்ந்துள்ளது.ஊரடங்கால் அனைத்து மாநிலக் கூட்டுறவு நிறுவனங்களிலும் விற்பனை குறைந்த நேரத்தில் தமிழகத்தில் ஆவின் நிறுவனம் இந்த குறுகிய மூன்று மாத காலத்தில் என்றும் இல்லாத வகையில் விற்பனையில் சாதனை செய்ததை, மே மாதத்தில் நடைபெற்ற மத்திய அரசின் பால்வளத்துறை காணொலிக் காட்சி கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.ஆவின் ஏழாவது இடம்ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், தரவு நுண்ணறிவு நிறுவனமான காந்தரின் உலக பேனல் பிரிவு நடத்திய ஆய்வறிக்கையில் இந்திய அளவில் பல கோடி மக்கள் தேர்வு செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் வரிசையில் ஆவின் ஏழாவது இடத்தைப்பிடித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்திய அளவில் உள்ள பால் உற்பத்தி நிறுவனங்களில் அமுல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாதிரியான ஆய்வறிக்கைகள் உறுதி செய்வதன் மூலம் நுகர்வோருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.ஆவினின் வரலாற்று சாதனையான பால் கொள்முதல் (சுமார் 40 லட்சம்), பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை இந்த கொரோனா காலகட்டத்திலும் சாதனையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply