- செய்திகள், விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்

கொல்கத்தா, மார்ச் 10:-
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டம் வரும் 19-ந் தேதி தர்மசாவில் நடக்க இருந்த நிலையில், பாதுகாப்பு குளறுபடி காரணத்தால், அந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மாநில அரசின்  பாதுகாப்பு குறைபாடுகளில் போட்டி எங்கு நடக்கும் என கடந்த ஒருவாரமாக நிலவி வந்த குழப்பத்துக்கு நேற்று ஐ.சி.சி. முற்றுப்புள்ளி வைத்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பைப் போட்டி தர்மசாலாவில் வரும் 19-ந்தேதி நடக்க இருந்தது. ஆனால், அந்தப் போட்டி நடக்கும் மைதானம் அருகே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவிடம் இருப்பதால், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆதலால், போட்டிக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்க இயலாது என்றும் மாநிலமுதல்வர் வீரபத்ரசிங் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய பாகிஸ்தானில் இருந்து வந்த 2 பேர் கொண்ட பாதுகாப்புக்குழு, போட்டியை தர்மசாலாவில் நடத்துவதைக் காட்டிலும், மற்ற நகரங்களில் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தர்மசாலாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அந்நாட்டிடம் அறிக்கை அளித்தனர்.  இதையடுத்து, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு புறப்பட இருந்த நேரத்தில் பாதுகாப்பு காரணங்களால் பயணத்தை அந்நாட்டு வாரியம் நிறுத்திவைத்த.

எப்படி அனுப்புவது?

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் நிருபர்களுக்கு இஸ்லாமாபாதில் அளித்த பேட்டியில் கூறுகையில் “ இமாச்சலப்பிரதேச முதல்வர் போட்டிக்கு முழுயாக பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார், இந்திய அரசும் பாகிஸ்தான் வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், எங்களின் வீரர்களை எப்படி அனுப்புவது. போட்டியை தர்மசாலாவில் இருந்து கொல்கத்தா அல்லது மொஹாலிக்கு மாற்றக்கோரி ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியிருக்கிறோம். '' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தானின் கடிதத்தை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டியை தர்மசாலா நகரில் இருந்து, கொல்கத்தா நகருக்கு மாற்றுவதாக அறிவித்தது. இது குறித்து ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் புதுடெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாதுகாப்பு காரணங்களால் தர்மசாலாவில் வரும் 19-ந்தேதி நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பைப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே தேதி, நேரத்தில் போட்டி நடக்கும்.

போட்டி அமைதியாக நடப்பதை தடுக்கும் விதமாக போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்த வாய்ப்பிருப்பதாக மாநில முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  மாநில அரசால்  போதுமான பாதுகாப்பு வழங்க இயலாத சூழலை கருத்தில்கொண்டும் போட்டியின் இடம் மாற்றப்பட்டது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல்முறையாக போட்டியின் இடம் மாற்றப்படுகிறது. இது மிகவும் எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஐ.சி.சி., பி.சி.சி.ஐ. இரு அமைப்புகளும் புரிந்துணர்வின் அடிப்படையில் போட்டியில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமும் தெரிவித்துள்ளோம். இந்த மாற்றத்துக்காக எந்தவிதமான நடவடிக்கையும் பி.சி.சி.ஐ. அமைப்புக்கு எதிராக எடுக்கமாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

பாக்ஸ் மேட்டர்

அனுராக் தாக்கூர் பாய்ச்சல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறிய இமாச்சலப்பிரதேச முதல்வர் வீரபத்ரசிங்கை பி.சி.சி.ஐ. செயலாளரும், பா.ஜனதா எம்.பியுமான அனுராக் தாக்கூர் கடுமை சாடியுள்ளார். அவர் கூறியதாவது “ சர்வதேச போட்டி நடக்க இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரு மாநில முதல்வரால் இப்படி பொறுப்பற்ற அறிக்கையை எப்படி வெளியிட முடிகிறது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இப்படி பேசுவதை ஒரு முதல்வர் தவிர்க்க வேண்டும். முதல்போட்டி தர்மசாலாவில் நடக்கிறது, போட்டி தொடங்கும் போது இங்கு நடத்துவது பாதுகாப்பானது அல்ல எனக்கூறுவது, மாநிலத்தின், நாட்டின் தோற்றத்தை உலகிற்கு எப்படி எடுத்துக்காட்டும்.

ஐ.சி.சி. மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் போட்டி குறித்து முடிவு செய்ய வேண்டும். இந்த உலகிற்கு முதல்வர் வீரபத்ரசிங் தவறான சமிக்கையை கொடுத்துவிட்டார் என்றே கூறமுடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply