- செய்திகள்

இந்தியா பதக்கம் வெல்ல முடியாதது ஏன்? அபினவ் பிந்த்ரா விளக்கம்…

புதுடெல்லி,ஆக.19-

நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் நாம் பெரிய அளவில் பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று அபினவ் பிந்த்ராவின் கருத்து தெரிவித்துள்ளார்.

கட்டமைப்பு வசதி
கடந்த 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரரான அபினவ் பிந்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இங்கிலாந்தில் ஒலிம்பிக்கில் ஒவ்வொரு பதக்கம் வெல்பவர்களுக்கும் கிட்டத்தட்ட ரூ.47 கோடி வரை செலவிடப்படுகிறது.

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்ல இவ்வளவு முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நமது நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைக்காத வரை ஒலிம்பிக் போட்டியில் நாம் பெரிய அளவில் பதக்கத்தை எதிர்பார்க்க முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply