- செய்திகள், விளையாட்டு

இந்தியா-ஜப்பான் இன்று மோதல் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில்

இபோ (மலேசியா), ஏப்.6:-

மிகவும் பிரசித்தி பெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவில் உள்ள இபோ நகரில் இன்று தொடங்குகின்றது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி 1983-ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் போட்டி 2005 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

25-வது ஆண்டாக நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்தியா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய  4 நாடுகளும் ஏற்கெனவே ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. ஆக இந்த அணிகள் இதை ஒரு பயிற்சி ஆட்டமாகவும் தங்கள் அணியைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு களமாகவும் அமைத்துக் கொள்ளும்.

அதே சமயம் பாகிஸ்தான், நியுசிலாந்து, மலேசியா ஆகிய அணிகள் தங்கள் திறமையை நிரூபித்து கோப்பையை வெல்ல களம் இறங்கும்.

பாகிஸ்தான் அணி உலக அளவில் சிறந்த ஹாக்கி என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. ஆக வரும் 10 நாள்களுக்கு ஹாக்கி விளையாட்டு ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து காத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 5 முறை கோப்பை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 8 முறை கோப்பை வென்றுள்ளது. பாகிஸ்தான் 3 முறை கோப்பை வென்றுள்ளது. தென் கொரியா, நியூசிலாந்து, ஜெர்மனி தலா இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது. ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து, இங்கிலாந்து தலா ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளது. 2010-ம் ஆண்டு போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்து பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

போட்டி விவரம்

ஏப்ரல் 6 – விளையாட்டு நடைபெறும் நேரம் (இந்திய நேரப்படி)

பாகிஸ்தான்-கனடா பிற்பகல் 1.35 மணி
இந்தியா-ஜப்பான்  பிற்பகல் 3.35 மணி
நியூசிலாந்து- மலேசியா மாலை 6.05 மணி

ஏப்ரல் 7

இந்தியா-ஆஸ்திரேலியா 1.35 மணி
நியூசிலாந்து-கனடா 3.35 மணி
ஜப்பான்-மலேசியா 6.05 மணி

ஏப்ரல் 9

ஜப்பான்-கனடா 1.35 மணி
நியூசிலாந்து-பாகிஸ்தான் 3.35 மணி
ஆஸ்திரேலியா-மலேசியா 6.05 மணி

ஏப்ரல் 10

ஜப்பான்-நியூசிலாந்து 1.35 மணி
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் 3.35 மணி
கனடா-இந்தியா 6.05 மணி

ஏப்ரல் 12
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து 1.35 மணி
இந்தியா-பாகிஸ்தான் 3.35 மணி
கனடா-மலேசியா 6.05 மணி

ஏப்ரல் 13

நியூசிலாந்து-இந்தியா  1.35 மணி
ஆஸ்திரேலியா-ஜப்பான் 3.35 மணி
பாகிஸ்தான்-மலேசியா 6.05 மணி

ஏப்ரல் 15
ஜப்பான்-பாகிஸ்தான் 1.35 மணி
ஆஸ்திரேலியா-கனடா 3.35 மணி
இந்தியா-மலேசியா

ஏப்ரல் 16 (இறுதி நாள்)
5-6- வது இடத்துக்கான போட்டி 1.10 மணி
3-4-வது இடத்துக்கான போட்டி 3.35 மணி
1-2-வது இடத்துக்கான போட்டி 6.15 மணி

அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1/ஹெச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3/ஹெச்.டியில் ஒளிப்பரப்பாகும்.

Leave a Reply