- செய்திகள், விளையாட்டு

இந்தியா சாம்பியன் ஆசிய நேஷனல் கோப்பை செஸ்

அபுதாபி, ஏப். 7:-

அபுதாபியில் நடந்த ஆசிய தேசிய செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் வியட்நாமை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

22 நாடுகள்  பங்கேற்ற ஆசிய தேசிய செஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி ஒட்டுமொத்தமாக 17 புள்ளிகளைப் பெற்று  வாகை சூடியது.

வியட்நாம் அணியுடனான இறுதிச்சுற்றில் கிராண்ட்மாஸ்டர்ஸ் எஸ்.பி. சேதுராமன், சசிகரண், பி. அதிபன் வெற்றியும், விதித் சந்தோஷ் குஜராத்தி ஆகியோர் சமனும் செய்தனர்.

இந்தியஆடவர் அணிக்கு இது 3-வது பட்டமாகும். இதற்கு முன் கடந்த 2005, 2009-ல் பட்டம் வென்றுள்ளனர். 2-ம் இடத்தை ஐக்கிய அரபு அணியை வீழ்த்தி சீனா பெற்றது. கஜகஸ்தான் 3-வது இடத்தையும், ஈரான் 4-வது இடத்தையும் பெற்றனர்.  மகளிர் பிரிவில் சீனா முதலிடத்தையும், இந்திய அணி 4-வது இடத்தையும் பிடித்தது.

Leave a Reply